ரயில் கொள்ளையை தடுப்பதற்காக இனி, இரவு நேர ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடவுள்ளனர்.
வேலூர் மாவட்டம்,காட்பாடி அருகே சிக்னலை துண்டித்து காவேரி எக்ஸ்பிரஸ் மற்றும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தி ஜன்னலோரம் அமர்த்திருந்த 4 பெண்களிடம் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே எஸ்.பி. விஜயகுமார் காட்பாடியில் ரயில்வே பாதுகாப்புபடை மற்றும் இருப்பு பாதை காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரயில் கொள்ளையர்களை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கவும், இரவு நேரத்தில் செல்லும் ரயில்களில் துப்பாக்கி ஏந்திய 3 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் ரயில் கொள்ளை தொடர்பாக வட மாநில இளைஞர்கள் 5 பேரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
