ரயில் பயணிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில், சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் 450 ரயில் நிலையங்களில் ஆயிரத்து 100 குடிநீர் வழங்கும் இயந்திரங்களை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் நிறைவடையும் என்றும், இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு 300 மி.லி. குடிநீர் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 345 ரயில் நிலையங்களில் ஆயிரத்து 106 குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.