ரயில்வே துறையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்பட்டது. 2017 - 2018 ஆம் ஆண்டில் அடிப்படை சம்பளத்தைக் கணக்கில் கொண்டு 78 நாட்கள் போனசாக வழங்க மத்திய அரசுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. 

80 நாட்கள் போனசாக அறிவிக்க வேண்டிய ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது 78 நாட்கள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

 ரயில்வே துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 12 லட்சத்து 26 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, ரயில்வே வாரியத்தின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.