சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த விபத்தில் தாய், தந்தையை இழந்ததையடுத்து, 10 மாதக் குழந்தைக்கு ரயில்வே துறை கருணை அடிப்படையில் வேலை வழங்கியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த விபத்தில் தாய், தந்தையை இழந்ததையடுத்து, 10 மாதக் குழந்தைக்கு ரயில்வே துறை கருணை அடிப்படையில் வேலை வழங்கியுள்ளது.

கருணை அடிப்படையில் ரயி்ல்வே துறை 10 மாதக் குழந்தைக்கு வேலை வழங்குவது இதுதான் முதல்முறையாகும். அந்தக் குழந்தை 18 வயது நிரம்பியபின் ரயில்வே வேலையில் சேர்ந்து பணியாற்ற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த 10 மாதக் குழந்தையின் தந்தை ராஜேந்திர குமார் பிலாய் ரயில்வே யார்டில் பணியாற்றி வந்தார். கடந்த 1ம் தேதி நடந்த சாலை விபத்தில் ராஜேந்திர குமாரும், அவரின் மனைவியும் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். ஆனால், அவர்களின் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.

அந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் பாதுகாப்பு தேவை, உதவி தேவை, வேலை தேவை என்பதற்காக ராய்ப்பூர் ரயில்வே மண்டலம் அந்தக் குழந்தைக்கு வேலை வழங்க முடிவு செய்தது. அந்த பச்சிழங் குழந்தையின் கைவிரல் ரேகையை முறைப்படி பதிவுசெய்து வேலைக்காகப் பதிவிட்டது.

இந்தக் குழந்தை வளர்ந்து 18 வயது நிறைவடையும்போது ரயில்வே துறை சார்பில் அவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 

ராய்பூர் ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் “ தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இதுவரை நடக்காதஒரு விஷயத்தை நாங்கள் செய்திருக்கிறோம். 10 மாதக் குழந்தைக்கு வேலையை உறுதி செய்திருப்பது இதுதான் முதல்முறை. 

அந்தக் குழந்தையின் கைவிரல் ரேகையை எடுக்கும்போது குழந்தை அழுதது உணர்பூர்வமாக இருந்தது. நாங்கள் அனைத்து உதவிகளையும் ராஜேந்திர குமாருக்காகச் செய்தாலும், ரயில்வே விதிகளை மீறவில்லை.

 அந்த பெண் குழந்தை வளர்ந்து 18 வயதை எட்டியபின், ரயில்வே சார்பில் வேலை வழங்குவது உறுதியாகும்” எனத் தெரிவித்தார்