ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது 

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் வருமான வரி்த்துறையினர் திடீரென ரெய்டு நடத்தினர். அப்போது அவர் வீட்டில்  இருந்து ரூ. 2.56 கோடி பணம் கைப்பற்றப்பட்டது 

டில்லியை சேர்ந்த உத்தம் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளவர் நரேஷ் பல்யான், இவர் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுப்பட்டு அளவுக்கு அதிகமான வருமானத்தை கொண்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையியில் நேற்று மாலை இவரது அலுவலகம், இல்லம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். 

சோதனைக்கு பின், ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகளுடன் கணக்கில் வராத ரூ 2 கோடியே 56 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறையினர். மேலும் இரவு முழுக்க ஆவணங்கள் சரிபார்க்கும் பணியும், இவ்வளவு  பணம் எங்கிருந்து வந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.