பாரத் ஜோடோ நியாய யாத்திரையை இன்று தொடங்கும் ராகுல் காந்தி!

பாரத் நியாய யாத்திரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இன்று தொடங்கவுள்ளார்

Rahul Gandhi to start Bharat Nyay Yatra today from manipur Thoubal smp

மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்ரா எனும் பெயரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்த நிலையில், பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், பாரத் நியாய யாத்ரா நடைபயணமானது ஜனவரி 14ஆம் தேதி (இன்று) தொடங்கி மார்ச் 20ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இன்று தொடங்கவுள்ளார். சுமார் 6,200 கிமீ கொண்ட இந்த யாத்திரையானது, அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளது.

இந்தியாவில் மேலும் பல கிரிப்டோகரன்சி இணையதளங்கள் முடக்கம்!

மணிப்பூர் தலைநகர் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹட்டா கங்ஜெய்புங்கில் இருந்து தொடங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி அங்கிருந்து யாத்திரையை தொடங்க அம்மாநில அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து, தௌபல் மாவட்டம் கோங்ஜோமில் உள்ள ஒரு தனியார் இடத்திற்கு யாத்திரை தொடங்கும் இடம் மாற்றப்பட்டது.

அதன்படி, தௌபல் மாவட்டம் கோங்ஜோமில் இருந்து ராகுலின் யாத்திரை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைக்கவுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios