Asianet News TamilAsianet News Tamil

Rahul Gandhi: இதற்கு என்ன பதில்? அதானி – மோடி படங்களைக் காட்டி ராகுல் காந்தி சரமாரி கேள்வி

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோதெல்லாம் அதானி குழுமத்துக்கு அந்நாட்டுடன் ஒப்பந்தங்கள் கிடைத்தது எப்படி என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Rahul Gandhi questions PM Modi over Adani issue, asks about relationship between Adani and PM Modi
Author
First Published Feb 8, 2023, 1:38 PM IST

மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடியும் அதானியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களைக் காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் செவ்வாய்க்கிழமை மக்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ராகுல் காந்தி அதானி குழும விவகாரம் தொடர்பான விமர்சனங்களை முன்வைத்தார்.

நான் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது என்னிடம் பேசிய மக்களில் பலர் அதானி பற்றி பேசினர் என்று குறிப்பிட்ட அவர் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

Millet khichdi: 7 நிமிடத்தில் சிறுதானிய கிச்சடி! பிரதமர் மோடிக்கு அமைச்சர் புகழாரம்!

Rahul Gandhi

அப்போது ராகுல் காந்தி பிரதமர் மோடியும் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை உறுப்பினர்களுக்கு காட்டினார். அதனைக் கண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, “அவையில் பதாகைகளுக்கு அனுமதி இல்லை” என்று தெரிவித்தார். அதற்கு பதில் சொன்ன ராகுல் காந்தி, “மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, இது பதாகை அல்ல; நமது பிரதமரின் புகைப்படம்தான்” என்று தெரிவித்தார்.

“2014ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு 2022ஆம் ஆண்டுக்குள் 140 பில்லியன் டாலராக எப்படி உயர்ந்தது? உலக பணக்காரர்கள் பட்டியலில் 609வது இடத்தில் இருந்தவர் 8 ஆண்டுகளில் 2வது இடத்துக்கு முன்னேறியது எப்படி?” என்று ராகுல் காந்தி வினவினார்.

Nyoma ALG: லடாக்கில் நியோமா விமானப்படை தளம் ரூ.230 கோடி செலவில் விரிவாக்கம்

“பிரதமர் மோடி ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்ட உடனே, ஸ்டேட் வங்கி அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது. பிரதமர் மோடி வங்கதேசம் சென்ற உடனே அந்நாட்டு அரசு அதானி குழுமத்துடன் 25 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. கடந்த ஆண்டு காற்றாலை திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கே வழங்க வேண்டும் என இலங்கை அதிபருக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்தார் என்று அந்நாட்டு மின்வாரியத் தலைவர் ஒருவர் குற்றம் சாட்டினார்.” என்று ராகுல் காந்தி பேசினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “விமானத் துறையில் அனுபவமே இல்லாத அதானி குழுமத்திடம் வசம்தான் ஆறு விமான நிலையங்கள் உள்ளன. சிறப்பாக செயல்பட்ட மும்பை விமான நிலைய நிர்வாகம் ஜிவிகே குழுமத்திடம் இருந்து பறித்து அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது. பாதுகாப்புத் துறையிலும் அதானி குழுமத்துக்கு எந்த அனுபவமும் கிடையாது. இருந்தாலும் அவர்களுக்குத்தான் பாதுகாப்புத்துறையின் நான்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியை நோக்கி நேரடியாக கேள்வி எழுப்பிய ராகுல், “நீங்களும் அதானியும் எத்தனை முறை ஒன்றாக பயணம் செய்திருக்கிறீர்கள்? எத்தனை முறை நீங்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட உடனே அதே நாட்டுக்கு அதானியும் போயிருக்கிறார்? எத்தனை முறை எந்த நாட்டுக்கு நீங்கள் பயணம் செல்கிறீர்களோ அந்த நாட்டுடன் அதானி குழுமம் ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறது?” என்று தெரிவித்தார்.

உடன்கட்டை ஏறுவதை பெருமையாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல்... பாஜக உறுப்பினருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!!

Follow Us:
Download App:
  • android
  • ios