இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சர்ச்சை: மல்யுத்த வீரர்களை சந்தித்த ராகுல் காந்தி!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சர்ச்சைகளுக்கு இடையே மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்தித்துள்ளார்

Rahul Gandhi meets wrestlers including Bajrang Punia amid row over WFI suspension

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக, அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகி விட்டார்.

இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடந்த 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில், பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கணை சாக்‌ஷி மாலிக், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததாலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்தார். அதேபோல், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய அரசு சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருது மற்றும் கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார்.

ஹமாஸ் முக்கியம்... இந்துக்கள் அல்ல: கேரள அரசை விமர்சித்த ராஜீவ் சந்திரசேகர்!

இதுபோன்ற கடும் எதிர்ப்பையடுத்து, பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது.

 

 

இந்த நிலையில், ஹரியானாவில் பஜ்ரங் புனியா மற்றும் பிற மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்தித்தார். இந்த சந்திப்பானது ஹரியானா மாநிலம் சாரா கிராமத்தில் நடைபெற்றது. 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், அதேகிராமத்தை சேர்ந்தவருமான தீபக் புனியாவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார். தீபக் மற்றும் பஜ்ரங் இருவரும் தங்கள் மல்யுத்தத்தை தொடங்கிய வீரேந்திர அகாரா எனுமிடத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ராகுல் காந்தி மல்யுத்த வீரர்களின் தினசரி உடற்பயிற்சி முறைகளைப் பார்க்க சாரா அரங்கிற்கு வந்ததாகவும், தன்னுடன் மல்யுத்தப் போட்டியில் அவர் ஈடுபட்டதாகவும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios