Karnataka assembly election 2023 : கர்நாடக தேர்தல் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கும் ராகுல்காந்தி!
கர்நாடக தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல்காந்தி, வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளிலிருந்து ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலில் வெளியாகிவிட்ட நிலையில், கர்நாடகம் இப்போது இரண்டு வார தேர்தல் பிரச்சாரத்திற்கு முழுமையாகத் தயாராகிவிட்டது.
கடந்த ஒரு மாதமாக பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் பல தலைவர்கள் தங்கள் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு மாநிலம் முழுவதும் சுறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கோலாரில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிவிட்டு, வடக்கு கர்நாடகா பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். உள்ளூர் பிரச்னைகள் மற்றும் மாநில அரசு மீது கவனம் செலுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வியூகத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
Watch : மைசூரு ஓட்டலில் தோசை ஊற்றிய பிரியங்கா காந்தி வத்ரா!!
கடந்த ஒரு மாதமாக தொடர் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் சர்ச்சைகளின் விளைவாக, மாநிலத்தில் ஆளும் பிஜேபி சற்று பின்தங்கிய நிலையில் உள்ளது. தனது சமீபத்திய பிரச்சாரத்தின் போது, ராகுல் காந்தி மாநில அரசு மீது நேரடித் தாக்குதலைத் தொடுத்து வருகிறார்.
தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறார் ராகுல்காந்தி.