சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சூரத் நீதிமன்றம் மறுப்பு... குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு!
சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ஒரு மாதத்திற்குள் நிறுத்தி வைத்ததுடன், ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே ராகுல் காந்தியின் எம்.பி.பதவியும் பறிக்கப்பட்டது. இதனையடுத்து சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சூரத் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் ராகுல்காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.