மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், ’நம்மிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால், பாலக்கேட் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்க தேவையில்லை. இந்தியாவில் இருந்தபடியே பாலக்கோட்டை தகர்த்திருக்கலாம். போர் விமானங்கள் என்பது தற்காப்புக்காக மட்டுமே, ஆக்கிரமிப்புக்காக அல்ல. எனது நம்பிக்கைக்கு ஏற்ப நான் செயல்பட்டேன். கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் போன்ற பிற சமூகங்கள் கூட ஆமென், ஓம்கர் போன்ற சொற்களால் வழிபடுகின்றன.

 

நான் 'சாஸ்திர பூஜை' நிகழ்ச்சி நடத்தும்போது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்தர்கள் போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். எனது ரஃபேல் பயணத்தின் போது, விமான கேப்டனை சூப்பர்சோனிக் வேகத்தில் பறக்கச் சொன்னேன். நானும் பாரிஸைச் சேர்ந்த கேப்டனும் மட்டுமே விமானத்தின் உள்ளே இருந்தோம். அதனால், சூப்பர்சோனிக் வேகத்தை அனுபவிக்க விரும்பினேன்.

காங்கிரசும், தேசியவாத காங்கிரசும், சூப்பர்சோனிக் வேகத்தில் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எங்கள் அரசாங்கம் சூப்பர்சோனிக் வேகத்தில் முன்னேறி செல்கிறது’’ என அவர் தெரிவித்தார்.