இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும், அது கூறும் தகவலை ஏற்றுக் கொள்வதோடு இதுபோன்ற நிகழ்வை வேறு எங்கும் பார்க்க முடியாது என கூறுகின்றனர். 

ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்யும் போது எதிர்கொள்ளும் மிகவும் சவாலான காரியம் போக்குவரத்து நெரிசல் எனலாம். பெரும் நகரங்களில் போக்குவரத்து சிக்கல்கள் மிகச் சிறப்பாக கையாளப்படுவதாக பலரும் நினைக்கலாம். ஆனால், போக்குவரத்து நெரிசல் எந்தெந்த வகையில் தலைசுற்ற வைக்கிறது என்று அங்கு வசிப்போருக்கு மட்டுமே தெரியும். 

மேலும் இந்தியாவில் போக்குவரத்து விதிகளை பற்றி நினைக்க ஆரம்பித்தாலே, அதனை யாரும் பின்பற்றுவதே இல்லை என்று தான் தோன்றும். பலருக்கும் இது தான் ஆகச் சிறந்த உண்மை என்றும் தெரியும். ஆனால், நம் இந்திய நாட்டில் போக்குவரத்து விதிகளை மிக கடுமையாக பின்பற்றும் மாநிலம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 

வைரலாகும் புகைப்படத்தில் வாகனங்கள் மிக சீராக வரிசையில் காத்து நிற்கின்றன. அந்த புகைப்படத்தின் படி, சாலையில் எந்த வாகனமும் சட்ட விதிகளை மீறவில்லை என்றே கூறலாம். இந்த புகைப்படத்தை டுவிட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டு, இதுபோன்ற காட்சியை தான் வேறு எந்த மாநிலத்திலும் பார்த்ததே இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இங்கு யாரும் மற்ற வாகனங்ளை அவசர கதியில் முன்னேறி செல்ல முயற்சிக்கவில்லை. 

வைரல் டுவிட்டர் பதிவின் படி, இந்த புகைப்படம் மிசோரம் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. "இது போன்ற காட்சியை தான் மிசோரம் மாநிலத்தில் மட்டுமே பார்க்கிறேன். இங்கு எந்த ஃபேன்சி கார்களும் இல்லை, ஈகோ இல்லை, சாலை உணர்ச்சிகள் இல்லை, யாரும் மற்றவர்களை ஆத்திரமூடைய செய்யும் ஹாரன் சத்தமும் இல்லை. இங்கு இருப்பது எல்லாமே அமையும், ஒழுங்கும் மட்டும் தான்." என புகைப்படத்தை வெளியிட்ட நபர் டுவிட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதே புகைப்படத்தை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் ஷேர் செய்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். "என்ன ஒரு டெரிஃபிக் புகைப்படம், ஒரு வாகனம் கூட சாலை விதிகளை மீறி நிற்கவில்லை. கடுமையான தகவலுடன் ஊக்கமளிக்கிறது. இனி வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்திக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. சட்ட விதிகளை பின்பற்றுவோம்... மிசோரத்திற்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள்." என ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டரில் பதிவிட்டார். 

இணையத்தில் இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும், அது கூறும் தகவலை ஏற்றுக் கொள்வதோடு இதுபோன்ற நிகழ்வை வேறு எங்கும் பார்க்க முடியாது என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.