Asianet News TamilAsianet News Tamil

Bomb Blast in Court: பஞ்சாப் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Punjab Ludhiana court blast... 3 people dead
Author
Punjab, First Published Dec 23, 2021, 1:39 PM IST

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக உள்ளார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் கழிவறைப் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில்,  3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Punjab Ludhiana court blast... 3 people dead

இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. திடீரென நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டு வெடிப்பு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் அங்கு விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சாப்பில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios