பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்றும் உ.பி.யில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கருத்துகணிப்பு இன்று வெளியாகி உள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 1304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மனி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் ஆம் ஆத்மி, பாஜக - பிஎல்சி கூட்டணிகளும் களத்தில் உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பின் படி அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வாய்புள்ளது. ஆம்ஆத்மி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்துகணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.

ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு முடிவுகள் :

ஆம் ஆத்மி - 62 முதல் 70 இடங்கள்

காங்கிரஸ் - 23 முதல் 31 இடங்கள்

சிரோமணி அகாலிதளம் - 16 முதல் 24 இடங்கள்

பா.ஜ.க - 1 முதல் 3 இடங்கள்


ABP கருத்துக்கணிப்பு முடிவுகள் :

காங்கிரஸ் - 28

ஆம் ஆத்மி - 61

சி.அகாலிதளம் - 25

மற்றவை - 5


என்.டி.டி.வி கருத்துக்கணிப்பு முடிவுகள் :

ஆம் ஆத்மி - 68 இடங்கள்

காங்கிரஸ் - 27 இடங்கள்

சிரோமணி அகாலிதளம் - 17 இடங்கள்

பா.ஜ.க - 3 இடங்கள்


இந்திய டூடே கருத்துக்கணிப்பு முடிவுகள் :

காங்கிரஸ் - 31

ஆம் ஆத்மி - 90

சி.அகாலிதளம் - 11

பாஜக கூட்டணி - 4

மற்றவை - 2