100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் அறிக்கையில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தை தடை செய்யப்பட்ட அமைப்புக்கு இணையானதாகக் குறிப்பிட்டது தொடர்பாக ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு பஞ்சாப் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று (திங்கட்கிழமை) விசாரித்த பஞ்சாப் நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பஜ்ரங் தள் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பின் தலைவரான ஹிதேஷ் பரத்வாஜ் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சங்ரூர் மாவட்ட நீதிமன்றம், காங்கிரஸ் தலைவருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளத்தை சிமி, அல்-கொய்தா போன்ற தேசவிரோத அமைப்புகளுடன் ஒப்பிட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கர்நாடகா தேர்தல் வெற்றியால் ராஜ்ய சபாவில் காங்கிரசின் கை ஓங்குகிறது!!

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தளம் பெயரைக் குறிப்பிட்டு, சமூகத்தில் பகைமை மற்றும் வெறுப்பை வளர்க்கும் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.
"சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது. பஜ்ரங் தளம், பிஎஃப்ஐ போன்ற அமைப்புகளும் சமூகத்தில் பகை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டுபவர்களும் புனிதமான அரசியலமைப்புச் சட்டத்தை மீற முடியாது" என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போதே பாஜகவினர் இதனை காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கான ஆயுதமாகக் கையாண்டனர். காங்கிரஸ் பஜ்ரங் தளத்தைத் தடை செய்யப்போகிறது என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். மல்லேஸ்வரம் தொகுதியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட பாஜக எம்எல்ஏ சி.என். அஸ்வத்நாராயணன், முடிந்தால் பஜ்ரங் தளத்தை தடை செய்யுமாறு காங்கிரஸுக்கு சவால் விடுத்தார். "பஜ்ரங் தளத்தை தடை செய்வதைப் பற்றி எப்படி பேசுகிறார்கள். அவர்கள் முயற்சி செய்யட்டும். எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் காட்டுவோம்" எனவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் பாஜக அனுமன் பக்தர்களை அனுமதித்துவிட்டதாக கூறியந பிரதமர் மோடி, ஜெய் பஜ்ரங்கி என்று கூறிக்கொண்டே வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவினர் அனுமன் வேடத்தில் திரண்டனர். ஹனுமன் சாலிசா பாடல்களைப் பாடி காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனம் தெரிவித்தனர். தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினர்.
டி.கே. சிவகுமாருக்கு பிறந்தநாள்... பரிசாக முதல்வர் பதவியை வழங்குமா காங்கிரஸ்?
