கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து! 8 பேர் பலி! விபத்து இதுதான் காரணமா?

Bus Accident: பஞ்சாப் மாநிலம் தல்வாண்டியில் இருந்து பதிண்டா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Punjab bus accident: Eight killed, several injured tvk

பஞ்சாப் மாநிலம் தல்வாண்டியில் இருந்து பதிண்டா நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. ஜிவான் சிங் வாலா என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த மிக கனமழை பெய்துள்ளது. இதனால் ஓட்டநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உயிரிழந்த 8 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பாலத்தில் தடுப்பு சுவரோ, தடுப்பு கட்டைகள் இல்லை. தடுப்பு கட்டைகள் இருந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது மழை பெய்து கொண்டிருந்ததாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios