Asianet News TamilAsianet News Tamil

எனது மகன் 49 வீரர்களை கொன்று குவித்த தீவிரவாதி என்பதை கற்பனை செய்யக்கூட முடியவில்லை... கதறும் தந்தை!

எனது மகனை பணிவானவனாக, உதவிபுரிபவனாக, உணர்வுபூர்வமானவனாகவே நினைத்தேன். அவன் இப்படியெல்லாம் மாறி தீவிரவாதியானதை கற்பனை செய்து கூடப்பார்க்க முடியவில்லை என புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

pulwama terrorist s father says never thought his son be suicide bomber
Author
Pulwama, First Published Feb 17, 2019, 1:13 PM IST

எனது மகனை பணிவானவனாக, உதவிபுரிபவனாக, உணர்வுபூர்வமானவனாகவே நினைத்தேன். அவன் இப்படியெல்லாம் மாறி தீவிரவாதியானதை கற்பனை செய்து கூடப்பார்க்க முடியவில்லை என புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார். pulwama terrorist s father says never thought his son be suicide bomber

காஷ்மீர், புல்வாமாவில் கொடூரத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-எ-முகமது தீவிரவாத அமைப்பு புதுமுகமான ஆதில் அகமது தார் என்கிற 19 வயது இளைஞரை தேர்வு செய்தது. 350 கிலோ பயங்கர வெடிபொருட்களுடன் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்தில் மோதிய தீவிரவாதி ஆதில் அகமது தார். வக்காஸ் கமாண்டோ என்பது இவனது மற்றொரு பெயர். புல்வாமாவில் உள்ள கந்திபாக் கிராமத்தைச் சேர்ந்தவன். காவல்துறை பதிவேடுகளில் ஆதில் அமகது தார் பெயர்  ‘சி’ பிரிவு தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

pulwama terrorist s father says never thought his son be suicide bomber

பழைய தாக்குதலில் ஈடுபட்ட அடில் அகமது தார் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவன் என தெரிய வந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு முன்னதாக அவனது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆதில் அகமது தார் வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி இருந்தான். இதனிடையே காஷ்மீரில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் தந்தை குலாம் ஹசன் தார் செய்தியாளர்களை சந்திக்கையில், ’’கடந்த ஆண்டு வாரிய தேர்வுகள் நடந்தபோது திடீரென எனது மகன் வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டான். அவன் தற்கொலை தீவிரவாதி ஆவான் என கற்பனை செய்தது கூட இல்லை.pulwama terrorist s father says never thought his son be suicide bomber

இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை காணும் போது எனக்கு வலி ஏற்படுகிறது. என் மகன் ஏன் இப்படி மாறினான் என எனக்குத் தெரியவில்லை. தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினரின் வலியை நான் உணர்கிறேன். எனது மகனால் இறந்து விட்டனர். என் மகனை போல யாரும் தீவிரவாதியாக மாறக்கூடாது என வேண்டிக் கொள்கிறேன்’’’ என

Follow Us:
Download App:
  • android
  • ios