புல்வாமா தாக்குதலை தொடர்ந்து தேசமே கொந்தளித்துக் கிடக்கிறது. பச்சைக் குழந்தைகள் கூட ’பாம் எடுத்துக் கொடுங்க, பாகிஸ்தானை பணால் பண்ணிட்டு வர்றேன்’ என்று ஆத்திரம் தெறிக்க பேசிக் கொண்டிருக்குதுங்க. அதேவேளையில் இந்த தாக்குதலை  முழுக்க முழுக்க அரசியல் ரீதியில் அணுக துவங்கியுள்ளன எதிர்கட்சிகள் சில. அதிலும் காங்கிரஸின் தலைவர் ராகுல் ‘இது அரசியல் செய்ய நேரமில்லை, மத்திய அரசுக்கு தோள் கொடுப்போம்’ என்று பக்குவமாய் அறிவித்தாலும் கூட, அவரது கட்சியினர் மோடியை வம்புக்கு இழுத்துக் கொண்டேதான் உள்ளனர். 

குறிப்பாக, காங்கிரஸின் முக்கிய நிர்வாகி ரண்தீப் கர்ஜிவாலா, “புல்வாமா தாக்குதல் நடந்த பகல் 3:10 மணிக்கு டிஸ்கவரி சேனல் எடுக்கும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு, சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தா மோடி.” என்று ஒரு ரவுசு குற்றச்சாட்டைக் கிளப்பியிருந்தார். 

குறிப்பாக, காங்கிரஸின் முக்கிய நிர்வாகி ரண்தீப் சுர்ஜிவாலா , “புல்வாமா தாக்குதல் நடந்த பகல் 3:10 மணிக்கு டிஸ்கவரி சேனல் எடுக்கும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு, சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மோடி.” என்று ஒரு ரவுசு குற்றச்சாட்டைக் கிளப்பியிருந்தார். 

இதற்கு மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போன்றோர் எவ்வளவு விளக்கம் கூறியும் காங்கிரஸ் ஏற்பதாயில்லை. இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளே சில தகவல்களை கசிய விட துவங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நாளில், பிரதமர் எங்கிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதிலிருந்துதான் பயங்கரவாதிகளின் செயல்பாட்டினால் மோடியின் உடம்பில் ஏற்பட்ட அசெளகரியங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 

அதன் விபரம் இதுதான்...”புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று மோடி ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தபடி  நாட்டு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக உத்தரகண்ட் மாநிலம் சென்று கொண்டிருந்தார். டேராடூனை அடைந்த அவரால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் பருவ நிலை மோசமாக இருந்தது. இதனால் 4 மணி நேரம் காத்திருந்தார். ஜிம் பூங்காவுக்கு பகல் 11:15 மணிக்கு வந்தவர் புலிகள் சரணாலயம், சுற்றுப்புற சூழல் சுற்றுலா மற்றும் மீட்பு மையத்தை துவக்கி வைத்தார். பின் ஒரு படகில் திகாலா வனத்தினுள் சென்றார். 

பிற்பகல் 3:30 மணிக்கு மோடிக்கு புல்வாமா தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் பற்றிய தகவல் அவருக்கு உரிய நொடிகளில் சென்று சேராமைக்கு காரணம், அவர் வனத்தினுள் இருந்ததால் போதிய நெட்வொர்க் இல்லாமலிருந்ததால் பிரதமரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் 25 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. 

தகவல் தெரிந்ததும் உடனே டில்லி திரும்ப நினைத்தார். ஆனால் பருவ நிலை தொடர்ந்து மோசமாக இருந்ததால் ஆகாய மார்க்க பயணத்துக்கு வாய்ப்பில்லாமல் போனது. இதனால் ராம் நகரில் இருந்து பெரெலி எனும் இடத்துக்கு காரில் பயணிக்க துவங்கினார். மிகவும் குண்டும் குழியுமான சாலையில் கஷ்டப்பட்டு பயணம் செய்து வந்து டில்லி விமானம் ஏறினார். இதுதான் நடந்த் உண்மை.” என்று கூறியுள்ளார்கள். 

இந்த தகவலின் கடைசி வரிகளை எடுத்து வைத்துக் கொண்டு பேசும் மிக முக்கிய அரசியல் விமர்சகர்கள்...” புல்வமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சி.ஆர்.பி.எஃப் வீரர்களைத்தான் துளைத்தனர் என்று நினைத்தோம். ஆனால் அவர்களால் பிரதமரும் பெண்டு கழட்டப்பட்டுள்ளார். 

ராம் நகர் முதல் பெரெலி வரையிலான குண்டும் குழியுமுமான சாலையில் பிரதமரின் கான்வாய் குலுங்கி குலுங்கி ஆடி அலைக்கழிந்து வந்ததன் மூலம் அந்த சொகுசு காரிலும் கூட அவருக்கு  உடம்பு வலி வருமளவுக்கான அசெளகரியங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த சாலையில் வழக்கமாக  பயணிக்கும் மக்களின் வலிகளையும், பிரச்னைகளையும் மோடியால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். 

தாக்குதல் சம்பவம் ஏதும் நிகழாமல், பிரதமர் அந்த சாலையில் கார் வழியாக பயணிக்க இயல்பாக ஏற்பாடு ஆகியிருந்தது என்று வைத்துக் கொள்வோம்...நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் முன்னதாகவே அந்த குண்டு குழி சாலையில் மிக மிக அருமையாக, சர்வதேச தரத்தில் தார் சாலையை அமைத்திருப்பார்கள். ஒரு சிறு மண் கூட இல்லாமல் துடைத்து கழுவி விட்டிருப்பார்கள்.
 
ஆனால் திடீர் பயணத்தின் மூலம் தன் தேசத்தில்  பல இடங்களில் இப்படி  சாலைகளின் தரம் கேவலமாக இருப்பதை மோடி புரிந்து கொண்டிருப்பார். அந்த சாலை ஏற்படுத்திய வலியின் மூலம் மக்களின் பிரச்னைகளை அறிந்திருப்பார். பிரதமர் அலுவலக உயரதிகாரிகளே ஒப்புக் கொண்டது போல் ‘அந்த மிக குண்டும் குழியுமான சாலையில்’ மிக சாதாரண போக்குவரத்து சாதனங்களில் தினமும் பயணிக்கும் மக்களின் சங்கடத்தை புரிந்து அதை உடனே மோடி தீர்த்தால் அவருக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்.” என்கிறார்கள். 

என்னா விமர்சனம் டா!? OMG!