புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்திவைத்து சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி பட்ஜெட்க்கு ஒப்புதல் அளிக்காததால், பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் நாளை முதல் 2 நாட்கள் விவாதம் நடைபெறவிருந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.ஏல்.ஏக்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க:ஆர்.எஸ்.எஸ்.காரராகவும், முழு நேர அரசியல்வாதியாகவும் தமிழக ஆளுநர்...! ஆர்.என்.ரவிக்கு எதிராக சீறிய திருமாவளவன்

ஆளுநர் உரையின் மீது அடுத்த 2 நாட்கள் விவாதம் நடைறும் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார். மேலும் ஆளுநரின் உரையின் மீதான விவதாம் வேறு ஒரு தேதியின் பின்னர் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றும் அதனால் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநர் தமிழிசையின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உரையின் பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர்.

மேலும் படிக்க:குஜராத் போல் நம் கிடையாது.. ஆனால் அது நினைத்து சந்தோஷம் பட முடியாது.. முதலமைச்சர் ட்விஸ்ட் பேச்சு..