Asianet News TamilAsianet News Tamil

Corona: புதிய உச்சம்..அலர்ட்டில் புதுச்சேரி.. 3 ஆயிரத்தை நெருங்கிய ஒரு நாள் பாதிப்பு..

புதுச்சேரியில் புதிய உச்சமாக கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Puducherry Corona case report
Author
Puducherry, First Published Jan 20, 2022, 4:53 PM IST

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள தகவலில் ''புதுச்சேரி இன்று ஒரே நாளில் 2,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் புதுச்சேரியில் 2,230 பேருக்கும் காரைக்காலில் 462 பேருக்கும் ஏனாமில் 68 பேருக்கும் மாஹேயில் 23 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,897 ஆக உயர்த்துள்ளது. இறப்பு விகிதம் 1.31 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 342 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஜிப்மரில் 49 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 32 பேரும் என 81 பேர் புதுச்சேரியிலும், 36 பேர் காரைக்காலிலும், 12 பேர் ஏனாமிலும், 15 பேர் மாஹேவிலும் என 144 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,909 பேர் என மொத்தமாக 13 ஆயிரத்து 53 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதன் மூலம் மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 1,073 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 392 (89.71 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9 லட்சத்து 13 ஆயரித்து 761 பேருக்கும், 2-வது டோஸ் 5 லட்சத்து 94 ஆயிரத்து 524 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 3,951 பேருக்கும் என மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 236 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதனிடையே புதுச்சேரியில் 7 மாதங்களுக்கு பிறகு கடந்த 18-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2,093 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவே தினசரி பாதிப்பின் அதிகபட்சமாக இருந்தது. தற்போது இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 2,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரத்தில் வெளியான புள்ளி விவரங்களின் படி, கொரோனா தொற்று அதிகம் பரவும் மாநிலங்களில் புதுச்சேரி முதலிடத்தில் இருந்தது. புதுச்சேரியில் 100 கொரோனா பரிசோதனைகளுக்கு 51.73 % என்ற அளவில் தொற்று பாதிப்பு உறுதி செய்யபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios