Public toilets to get Google support in all cities
மக்களுக்கு உதவும் வகையில், சுத்தமான பொதுக் கழிவறை நகரங்களில் அடையாளம் காட்ட, கூகுள் ‘லொக்கேட்டருடன்’ கழிவறை இருக்கும் இடங்கள் இணைக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக , கூகுள் நிறுவனம், மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதி இணைக்க மத்திய நகர விவகாரத்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள மத்திய நகர விவகாரத்துறை அமைச்சகம், முக்கிய நகரங்களை மட்டும் கூகுள் ‘லொக்கேட்டரில்’ இணைத்துள்ளது. இதன் மூலம் அந்த குறிப்பிட்டநகரத்தில் பொதுக்கழிவறை எங்கிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதை நாடு முழுவதும் உள்ள நகரங்களின் விரிவு படுத்தும் நோக்கில் மத்திய நகர விவகாரத்துறை அமைச்சகம், கூகுள் நிர்வாகம், மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆகியவற்றுக்கு கடந்த 7-ந்தேதி கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், “ கழிவறையை, கூகுள் ‘லொக்கேட்டருடன்’ இணைக்கும் திட்டம் ஏற்கனவே 40 நகரங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை மற்ற நகரங்களுக்கும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் தங்களின் நகரங்களில் உள்ள கழிவறை உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் கூகுள் ‘லொக்கேட்டரில்’ இணைத்தால், மத்திய அரசின் ‘2018 தூய்மை திட்டத்தில்’ ஆய்வு செய்து புள்ளிகள் அளிக்கப்படும். நகரங்களில் உள்ள பொது கழிவறை குறித்த வரைபடத்தை முன்னுரிமை கொடுத்து தயாரிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
