சமீப காலமாக இளைஞர்கள், பெண்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரையும் ஆட்டி வைத்து வருகிறது பப்ஜி மோகம். இந்த விளையாட்டிற்கு அடிமையாகி பலர், நரம்பு தளர்ச்சி, கண் பிரச்சனை, தூக்கத்தை தொலைத்து விளையாடுவதால் இன்னும் பல பிரச்சனைகளுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரபலங்கள் சிலரும் இந்த விளையாட்டுக்கு அடிமை என்பதை அவர்களே பல முறை கூறுகின்றனர். 

இரண்டு, மூன்று நாட்கள் கூட தூக்கத்தை தொலைத்து பலர் விளையாடுவதை தடுப்பதற்காக, இந்த கேம்மை எட்டு மணி நேரம் மட்டுமே விளையாட முடியும் என்று ரூல் தற்போது கொண்டு வர பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விளையாட்டின் விபரீதம், திருமணம் ஆன 19 வயது பெண் ஒருவர், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, பப்ஜி பாட்னருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அபயம் என்கிற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

குஜராத்தை சேர்ந்த இந்த பெண்ணுக்கும், கட்டிட தொழில் செய்து வரும் ஒருவருவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு, கை குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த பெண், தன்னுடைய மொபைல் போனில், பப்ஜி விளையாட்டை விளையாட துவங்கியுள்ளார். அப்போது இவருடைய பாட்னராக பக்கத்துக்கு தெருவை சேர்ந்த ஒரு இளைஞர் விளையாடி வந்துள்ளார்.

பப்ஜி விளையாட்டின் மூலம் நட்பாக ஆரம்பித்த இவர்களுடைய பழக்கம் பின் காதலாக மாறியுள்ளது. இதனால் தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, பப்ஜி பாட்னருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறி, தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இவரின் நிலையை அறிந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், குடும்பத்தினர் உதவியுடன் உரிய கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள்.