Asianet News TamilAsianet News Tamil

நீதிபதி கர்ணனுக்கு மனநிலை மருத்துவ பரிசோதனை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

psycological test for judge karnan
psycological test-for-judge-karnan
Author
First Published May 1, 2017, 11:45 AM IST


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் கர்ணன். இவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், உச்சநீதிமன்றம் முதன்மை நீதிபதி, பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார்.

ஆனால், அவரது புகார் மனு ஏற்கப்படவில்லை. தொடர்ந்து அவரை பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் வழக்கு தொடர்ந்தார். பல வழக்குகளில் ஆஜாராகாமல் இருந்த அவருக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கில் அவர் ஆஜரானார்.

psycological test-for-judge-karnan

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவர், தனக்கு மன உளைச்சர் ஏற்படுத்தியதாகவும், தலைமை நீதிபதி உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் நீதிபதிகள், தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதற்கான தொகையை அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த வழக்கு விசாரணையில், நீதிபதி கர்ணன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். மேலும் செய்தியளார்களிடம் முதன்மை நீதிபதி உள்பட 7 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

எனவே அவரது மனநிலையை வரும் 5ம் தேதி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனை கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டும். இதன் அறிக்கையை மருத்துவ குழுவினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios