Psycho killer who tortured eight women in adultery
கிடைத்த பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, உல்லாசத்தில் திருப்தி இல்லையென்றால் அந்த பெண்களை கொன்றுவிடுவது. மேலும் 8 பெண்களை கற்பழித்து கொன்ற சைக்கோ கில்லரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு பேட்டரஹள்ளி சரகத்திற்குட்பட்ட ஆந்திர ஹள்ளி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் கூலி தொழிலாளி ஒருவர், அரை நிர்வாணக் கோலத்தோடு கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சென்ற பேட்டரஹள்ளி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில், மர்ம நபர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியில் தனியார் கட்டிடம் ஒன்றில் கூலி வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளி ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் தமிழக மாநிலத்தை சேர்ந்த துரை என்ற கபில் துரை என்பது தெரியவந்தது.
விசாரனயில்ன் போது, பேட்டரஹள்ளி வழக்கில் தீர்காண முயன்ற போலீசார் வேறு சில அதிர்ச்சி தகவலையும் அவரிடம் இருந்து பெற்றனர். அதாவது துரைக்கு பேட்டரஹள்ளி கொலை மட்டுமின்றி மேலும் சில கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.
திருமணமான இவர் 2002ம் ஆண்டு குடிபோதையில் மனைவியுடன் உடலுறவில் திருப்தி ஏற்படாததால் மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக விஜயநகர் போலீசார் அவரை கைது செய்து 2 வருடம் சிறையில் அடைத்திருந்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு, விபச்சாரப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. பகலில் கூலி வேலை செய்துவிட்டு, கிடைத்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க அனுபவிக்க தொடங்கினர். உல்லாசத்தின் போது ஏதேனும் தகராறு, அல்லது திருப்தி இல்லையென்றால், அந்த பெண்களை கல்லால் தாக்கியோ அல்லது கழுத்தை நெரித்தோ கொலை செய்துவிட்டு, சடலத்தை வனப்பகுதியில் வீசி விடுவார்.
அதன்படி 2010ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை மொத்தம் 8 பெண்களை இவர் கொலை செய்திருக்கிறார். இதில் பீன்யா, யஸ்வந்த்புரம், வி.வி.புரம் மட்டுமின்றி தமிழகத்தில் நடந்த சில கொலை வழக்குகளும் அடங்கும் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சைக்கோ கில்லர் துரையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கொலைக்கான ஆதாரங்களை திரட்டும் நோக்கில் அவரை காவலில் எடுத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
