psycho killer murdered 6 onthe spot in haryana
ஹரியானா மாநிலம் பல்வாள் மாவட்டத்தில் 2 மணிநேரத்தில் 6 பேரை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள, பல்வாள் மாவட்டத்தில்,இன்று அதிகாலை சரியாக 2 மணி முதல் 4 மணி அளவில்,சைக்கோ போன்று, இரும்பு கம்பியை கையில் வைத்துக்கொண்டு சுற்றி திரிந்துள்ளார்.

அப்போது, அந்த வழியில் இருந்த பிச்சைக்காரர் மற்றும் தெரு ஓரம் உறங்கி வந்த சில நபரை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்
அதுவும் இரண்டே மணி நேரத்தில் 6 பேரை கொலை செய்துள்ளார்.மேலும் பலரை தாக்கி உள்ளதாக தெரிகிறது.
தலையில் பலத்த காயம் அடைந்த ஆறு பேரில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் போது இறந்துள்ளனர்.
இறந்தவர்களில் 5 பேர் ஆண்கள்,1 பெண் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பத்தை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சைகோ கொலைக்காரனை கயிறு கொண்டு பிடித்துள்ளனர்.தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொலைக்காரனை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில்,முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டதா அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டு இவ்வாறு செய்துள்ளாரா என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஹரியானா மாநில மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
