ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி உள்ளிட்ட 68 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். இதை தொடர்ந்து ராகுல்காந்தி மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறி அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து பல அதிரடி சம்பவங்கள் அரங்கேறின.

ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ராகுல்காந்தி வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு, அதன் ராகுல் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார். இதனிடையே தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : 73 வயதான மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா? ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி..

இதனிடையே ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி ஹெச்.ஹெச். வர்மா உள்ளிட்டோருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் பதவி உயர்வு வழங்கியது. இந்த பதவி உயர்வுக்கு எதிரான மனுக்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் அதனை பொருட்படுத்தாமல், ஹெச்.ஹெச். வர்மா உள்ளிட்ட 68 பேருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் பதவி உயர்வு அளித்தது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, பதவி உயர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பதவி உயர்வு அறிவிப்பு சட்டவிரோதமானது. நீதிபதிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க : தமிழக மருத்துவ கல்லூரிகளின் கலந்தாய்வை இனி மத்திய அரசே நடத்துவதா.? பாஜகவிற்கு எதிராக சீறும் சீமான்