மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜீவ் காந்தி அரசுக் கல்லூரியில் கடந்த புதன் கிழமையன்று மூத்த பேராசிரியர் தினேஷ் சந்திர குப்தா என்பவர் ABVP அமைப்பைச் சேர்ந்த மாணவர்களின் காலை தொட்டு கும்பிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த புதன் கிழமையன்று பேராசிரியர் தினேஷ் குப்தா பாடம் நடத்திக்கொண்டிருந்த போது. திடீரென மாணவர்கள் போராட்டம் செய்ய தொடங்கினர். அப்போப்து அவரால் பாடம் எடுக்க முடியாமல் மிகவம்  தொந்தரவு அடைந்தார்.

அந்த மாணவர்களிடம் எவ்வளவோ மன்றாடியும் அவர்கள் கேட்பதாக இல்லை....தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதமாக வெளியிடப்படுகிறது என்றும், தாங்கள் பாரத மாதா கீ ஜெய் என சொல்வதை தடுக்கும் வகையிலும் தினேஷ் குப்தா செயல்பட்டதால் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாணவர்கள் கேட்டு உள்ளனர் 

அதற்கு இதய நோயாளியான தினேஷ் குப்தா, மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழ முற்பட்டார்.அப்போது வேண்டாம் என மாணவர்கள் ஒதுங்கியும் கூட அவர் தொடர்ந்து மாணவர்கள் காலை தொட்டு கும்பிட்டு உள்ளார் 

அதன் மறுநாள் முதல் அவர் கல்லூரிக்கு வரவே இல்லையாம். மிகுந்த மன வேதனையில் வீட்டிலேயே உள்ளாராம் இதய நோயால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் தினேஷ் குப்தா.