அடுத்த 20 ஆண்டுகளில் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் என்றும் இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் யதி நரசிங்கானந்தின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் என்றும் இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் யதி நரசிங்கானந்தின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் தஸ்னா தேவி கோவிலின் தலைமைப் பூசாரியான நரசிங்கானந்த் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது, 'கணித கணக்கீடுகளின்படி 2029ல் இந்து அல்லாத ஒருவர்பிரதமராக வருவார்.
மேலும் இந்து அல்லாத ஒருவர் பிரதமராக வந்தால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்துக்கள் அல்லாத தேசமாக இந்தியா மாறும். அந்த ஒரு நிலையைத் தவிர்க்க இந்துக்கள் அதிகமாககுழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.இந்துத்துவாவை தட்டி எழுப்பும்பொருட்டு, தர்ம சன்சத் நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 12 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.இவரது இந்த பேச்சு தற்போது அனலை கிளப்பியுள்ளது. மேலும் இவரது பேச்சு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த டிசம்பரில் உத்தரகண்டின் ஹரித்வார் நகரத்தில் யதி நரசிங்கானந்த் நடத்திய கூட்டத்திலும், தில்லியில் ஹிந்து யுவ வாகினி என்ற அமைப்பு நடத்திய கூட்டத்திலும் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றதாக எழுந்த புகாரில் அவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் நடந்த இந்து மகாபஞ்சாயத் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நரசிங்கானந்த், இந்தியாவில் முஸ்லிம் ஒருவர் பிரதமரானால் அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்றும், இந்துக்கள் ஆயுதம் ஏந்தி தங்களின் இருப்புக்காக போராட வேண்டும் என்றும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
