Asianet News TamilAsianet News Tamil

பிரியங்கா தேர்தலில் போட்டியா? அடுத்த வாரத்தில் ராகுல் முக்கிய முடிவு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவாரா இல்லையா என்பது வரும் 4-ம் தேதி தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Priyanka to contest elections?
Author
Uttar Pradesh, First Published Jan 29, 2019, 3:06 PM IST

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவாரா இல்லையா என்பது வரும் 4-ம் தேதி தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அண்மையில் கிழக்கு உ.பி.யின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமித்தார். கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு இதுவரை அதைப் பற்றி எதுவும் வெளிப்படையாகப் பிரியங்கா பேசவில்லை. தனது எதிர்கால செயல் திட்டம் எப்படி இருக்கும் போன்ற விஷயத்தை கட்சித் தொண்டர்களிடம் தெரிவிக்கவில்லை. எனவே பிரியங்கா எப்போது முறைப்படி கட்சிப் பதவியை ஏற்றுக்கொண்டு தனது கருத்துகளைக் கூறுவார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். Priyanka to contest elections?

இந்நிலையில் பிப்ரவரி 4-ஆம் தேதி பிரியங்காவும் ராகுலும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். அந்தக் கூட்டத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் பிரியங்காவை கட்சியின் பொதுச் செயலாளராக அறிமுகம் செய்து வைக்கவும் ராகுல் முடிவு செய்துள்ளார். அந்தக் கூட்டத்தில் பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது தெரியவரும் என்றும் தனது செயல்திட்டம் குறித்தும் பிரியங்கா பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Priyanka to contest elections?

கடந்த 2004-ம் ஆண்டில் ராகுல் காந்தி அரசியலில் அடி எடுத்துவைத்தபோது, ராகுல் காந்தியை அரசியல்வாதியாகவும் அமேதி தொகுதி வேட்பாளராகவும் பிரியங்கா அறிமுகம் செய்துவைத்தார். இந்த முறை பிரியங்காவை அரசியல்வாதியாக செய்தியாளர்களிடம் ராகுல் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios