உத்தரப்பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை தாய் சோனியாகாந்தி மற்றும் சகோதரர் ராகுலுக்காக மட்டுமே பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் பிரியங்கா காந்தி நேரடி அரசியலில் நுழைந்துள்ளார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ்- மாயாவதி- ராகுல் ஆகியோர்  இணைந்து போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அகிலேஷ்- மாயாவதி கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டனர்.

இந்நிலையில் கூட்டணியில் கழற்றிவிடப்பட்டதால் காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் இருந்து வந்ததது. இதனையடுத்து உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சி அறிவித்தது.

 

இந்நிலையில் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும்  வகையில் பிரியங்கா காந்திக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அவரது தாயார் சோனியாகாந்தி மற்றும் சகோதரர் ராகுலுக்காக மட்டுமே பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். இந்நிலையில், தற்போது ப்ரியங்கா காந்தியும் அதிரடி அரசியலில்  களமிறக்கப்பட்டுள்ளார். இதனால்,  உ.பி.யில் பாஜக, அகிலேஷ்- மாயாவதி, காங்கிரஸ் கூட்டணி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.