Priyanka chopra comment about her meeting with Modi
குட்டைப் பாவாடை என்பது எங்கள் குடும்ப ரத்தத்தில்ஊறிப்போன விஷயம் என்றும் தான் மட்டுமல்ல தனது தாயும்கூட குட்டைப் பாவாடைதான் அணிவார் என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அதிரடியாகக் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா உள்ளிட்ட 4 நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது ஜெர்மனி பயணத்தின்போது, பெர்லின் நகரில், மரியாதை நிமித்தமாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, பிரியங்கா சோப்ரா குட்டைப் பாவாடை அணிந்தபடி கால்மேல் போட்டு பிரதமர் முன்பு அமர்ந்திருந்தார். மேலும் பிரியங்கா சோப்ரா அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
ஆனால் இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத பிரியங்கா சோப்ரா இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதில் அளித்துள்ளார். அதில் குட்டைப் பாவாடை என்பது எங்கள் குடும்ப ரத்தத்தில் ஊறிப் போன விசயம் என்றும், நான் மட்டும் இல்லை, எனது தாயும் கூடத்தான் குட்டைப் பாவாடை அணிவார் என தெரிவித்துள்ளார்.
பிரியங்காவும், அவரது தாயும் குட்டை பாவாடை அணிந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
