ஒரு அடார் லவ் திரைப்படத்தின் டீசரில் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை பிரியா வாரியாரின் படம், சிபிஐ கட்சியி போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு சார்பாக கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. 

கலைத்துறையினரின் பேச்சுரிமை, கருத்துரிமையை பாதுகாக்க ஆண்டுதோறும் நடைபெறும் மாநில கருத்தரங்கை பிரபலப்படுத்தும் வகையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு நடிகை பிரியா வாரியார் இடம் பெறும் வகையில் போஸ்டரை அச்சடித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த கருத்தரங்கு போஸ்டர், கேரளா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸ் ஜுலி, ஜிமிக்கி கம்மல் செரின் போன்றோர் பிரபலமாகி வரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார். 

கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகையான இவர், ஒரு அடார் காதல் படத்தின் டீசர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். அதனால், அவருக்கு பல மொழிகளில் இருந்தும பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 

நடிகை பிரியா வாரியார், கண் அடிப்பது போன்ற காட்சிக்கு எதிராக இசுலாமிய அமைப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தது. ஒரு அடார் காதல் படத்தின் இயக்குநர் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.