Privatisation of Indain railway stations

தெற்கு ரெயில்வே கோட்டத்தில் 50 ரெயில் நிலையங்களும், தமிழகத்தில் 27 ரெயில்நிலையங்களும் விரைவில் தனியார் மயமாக இருக்கின்றன. முதல்கட்டமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

400 ரெயில்நிலையங்கள்

நாடுமுழுவதும் அதிக வருவாய் ஈட்டும் 400 ரெயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு மாற்றும் வகையில் தனியார் பங்களிப்புடன் மறுமேம்பாட்டு திட்டம் செயல்படுத்த நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் இந்த திட்டத்தின் முதல் கட்டப்பணிகளை ரெயில்வேஅமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கிவைத்தார்.

ரூ.350 கோடி

இதில் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 23 ஏ, ஏ1 ரெயில் நிலையங்கள் முதல்கட்டமாக ேமம்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ. 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 1.45 ஏக்கர் பரப்பளவில்ஷாப்பிங் மால் கட்டவும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனைக்கு நிறுவனம்

இதன் மூலம் பயணிகளுக்கு அதிக வசதிகள் கிடைப்பதுடன், ரெயில்வே துறைக்கு அதிக வருவாயும் கிடைக்கும். முதல் கட்டத்திட்டத்தில் ரெயில்வேக்கு சொந்தமாக இருக்கும் 140 ஏக்கர் நிலம் 45 ஆண்டுகளுக்கு லீசுக்கு விடப்படும். இந்த மேம்பாட்டு திட்டத்தில் ஆலோசனை கூற ‘பாஸ்டன் கன்சல்டிங் குரூப்’ என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரெயில் நிலையங்களை தூய்மைப்படுத்துவது, பராமரிப்பது, உள்ளிட்ட பணிகளை தனியார் நிறுவனங்கள் கவனிக்க வேண்டும்.

தனியார் சேவை

இது குறித்து ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரெயில்வேயில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குதல், சிக்னல் தொடர்பு, ரெயில்களைஇயக்குவது ஆகியவற்றை தவிர்த்து மற்ற பகுதிகள் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்படும்.

ெரயில் நிலையத்தில் டிஜிட்டல் போர்டுகள், நகரும் படிகட்டுகள், சுயமாக டிக்கெட்எடுக்கும் எந்திரங்கள் அமைப்பது, நடைபாதை பராமரிப்பு, வை-பை, ஓய்வு அறைகள் உள்ளிட்டவைகள் தனியார் மூலம் அமைக்கப்படும். 

18 மாதங்கள்

இதற்காக தெற்கு ரெயில்வே தொழில்நுட்பக்குழு, நிதிக்குழு என இரு குழுக்களை உருவாக்கியுள்ளது. இந்த குழு தனியார் நிறுவனங்களின் திட்டமதிப்பீடுகளை ஆய்வு செய்யும். 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தகுதியான தனியார் நிறுவன ஒப்பந்ததாரரை நியமதித்து, அடுத்த 18 மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்’’ எனத் தெரிவித்தார். 

45 ஆண்டு லீசு

இதில், ரெயில்வே நிலையங்களைச் சுற்றி இருக்கும் பகுதிகள் அதாவது,பிளாட்பார்ம், சைக்கிள், பைக், கார் நிறுத்துமிடம் ஆகியவை 15 ஆண்டுகளுக்கு தனியாருக்கு லீசுக்கு விடப்படும். ரெயில்வேக்கு சொந்தமான பயன்படுத்தப்படாமல் இருக்கும் இடங்கள் 45 ஆண்டுகளுக்கு லீசுக்கு விடப்படும். மேலும் ரெயில் நிலையத்தின் சுற்றியுள்ள வௌிப் பகுதியும் 45 ஆண்டுகளுக்குலீசுக்கு விடப்படும்.

ரூ.ஒரு லட்சம் கோடி

ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. ஒருலட்சம் கோடியாகும்.ரெயில்வேக்கு சொந்தமான 1,200 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு லீசுக்கு விடரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படும்



தமிழக ரெயில்நிலையங்கள்

முதல் கட்டத்திட்டத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையமும், 2-ம் கட்டத்திட்டத்தில் சென்னை கோட்டத்தில் உள்ள சென்னை எழும்பூர், அரக்கோணம், செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி, தாம்பரம், சேலம் கோட்டத்தில் கோவை, கரூர், ஈரோடு, ேமட்டுப்பாளையம், சேலம் , திருப்பூர், திருச்சிக்கோட்டத்தில் கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி, ராமேஸ்வரம், திருநெல்வேலி, விருதுநகர், திருவனந்தபுரம் கோட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ரெயில்நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.