"பிரதமர் உங்களை சந்திக்க விரும்புகிறார்" பார்லிமென்ட் கேன்டீன் - ஆச்சர்யத்தில் மூழ்கிய 8 எம்.பி.க்கள்!
PM Modi Surprise for MPs : இன்று வெள்ளிக்கிழமை அன்று 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றால் அது மிகையல்ல. அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் உணவருந்த அழைக்கப்பட்டுள்ளனர்.
பாஜக எம்.பி.க்கள் ஹீனா காவிட், எஸ்.பாங்னான் கொன்யாக், ஜாம்யாங் செரிங் நம்கியால், எல் முருகன், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ராம்மோகன் நாயுடு, பிஎஸ்பி எம்பி ரித்தேஷ் பாண்டே மற்றும் பிஜேடி எம்பி சஸ்மித் பத்ரா ஆகியோர் பிரதமர் மோடியுடன் மதிய உணவில் கலந்து கொண்டனர். பிற்பகல் 2:30 மணியளவில், எம்.பி.க்களுக்கு பிரதமர் தங்களைச் சந்திக்க விரும்புவதாக அழைப்பு வந்தது.
பின் அவர்களிடம் நேரில் வந்து பேசிய பிரதமர் மோடி அவர்கள் "வாருங்கள் நாம் போகலாம். நான் உங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். லிப்ட் கதவு திறந்ததும் அதிர்ச்சியடைந்த எம்.பி.க்கள், கேன்டீனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஒருவர், "எங்களுக்கு அழைப்பு வந்தது, நாங்கள் மேலே சென்றோம், பின்னர் நாங்கள் எங்கு செல்கிறோம் என்பதை உணர்ந்தோம். அப்போது கேண்டீன் கதவுகள் திறக்கப்பட்டது"
மக்களவைத் தேர்தல் 2024: 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி - இந்திய தேர்தல் ஆணையம்!
“நாங்கள் கேன்டீனை அடைந்தபோது, பார்வையாளர்கள் ஓய்வறையில் இருந்தோம். நாங்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்து, எப்படி அழைக்கப்பட்டோம் என்று ஆச்சரியப்பட்டோம்! என்றும் அந்த எம்.பி மேலும் கூறினார். இந்த உரையாடலின் போது, பிரதமர் மோடி தனக்கு பிடித்த உணவு கிச்சடி என்று பகிர்ந்து கொண்டார். "நான் எப்போதும் PM மோடில் இருப்பதில்லை. நல்ல உணவை சாப்பிட வேண்டும் என்று தான் விரும்பினேன்" என்று பிரதமர் கூறியுள்ளார்.
சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) தனது வருகையை எதிர்த்த போதிலும், 2015 ஆம் ஆண்டில் அவர் அப்போதைய நவாஸ் ஷெரீப்பைச் சந்திக்க பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும் பிரதமர் தெரிவித்தார். எம்.பி.க்களும், பிரதமர் மோடியுடன் அமர்ந்து இப்படி அரட்டை அடிக்கும் அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதுடன், அவரது பரபரப்பான வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி அவரிடம் பேசினர்.
Interim Budget 2024 | இடைக்கால பட்ஜெட்