Prime Minister Narendra Modi will launch a Uthayan project tomorrow
நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்கும் விமானப்பயணம் கிடைக்க வேண்டி, அறிமுகப்படுத்தப்பட்ட ‘உதான்’(UDAN) திட்டத்தை நாளை(வியாழக்கிழமை) முறைப்படி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ரூ.2500 மட்டுமே
500 கி.மீ. தொலைவு, ஒரு மணி நேரப் பயணம் கொண்ட நகரங்களுக்கு இடையே தொடங்கப்பட உள்ள இந்த விமான சேவையின் கட்டணம் வெறும் ரூ.2,500 மட்டும்தான்.
டெல்லி முதல் சிம்லா, கடப்பா முதல் ஐதராபாத், நான்ேட் முதல்ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை சிம்லாவில் இருந்தவாறு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
உதான் திட்டம்
கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி இந்த ‘உதான்’ திட்டம் தேசிய உள்நாட்டு போக்குவரத்து கொள்கையின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு, பல கட்டங்களுக்கு பின் நடைமுறைக்கு வருகிறது.
ஒரு மணிநேர பயணம்
இது குறித்து பிரதமர் அலுவலகம் வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
நாட்டில் உள்ள குடிமக்களுக்கு விமானப்பயணம் சாத்தியமாகும் வகையில், முக்கியமான மண்டலங்களுக்கு இடையே குறைந்த விலை கட்டணத்தில் ‘உதான்’ திட்டம் மூலம் விமானப்பயணம் இன்று தொடங்கப்படுகிறது. சிம்லா-டெல்லி, கடப்பா-ஐதராபாத்,நான்டேட்-ஐதராபாத் இடையிலான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். விமானத்தில் ஒரு மணிநேர பயணத்துக்கும், ஹெலிகாப்டரில் 30 நிமிட பயணத்துக்கு ரூ. 2500 கட்டணமும் வசூலிக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக
மேலும், பிரதமராக மோடி பதவி ஏற்றபின், சிம்லா செல்வது இது முதல் முறையாகும். அங்குள்ள மண்டி மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
கடந்த 2003ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது, மோடிஇமாச்சலப் பிரதேசத்துக்கு பிரசாரம் தொடர்பாக பங்கேற்று இருந்தார். அதன்பின், இப்போது செல்கிறார். மேலும், 2002ம் ஆண்டுவரை இமாச்சலப் பிரதேசத்தின் கட்சி விவகார பொறுப்பாளராகவும் மோடி செயல்பட்டார் என்பது குறிப்படத்தக்கது.
