நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சமூக வளர்ச்சிக்காகவும் தனது எழுத்துக்களின் மூலம் குரல் கொடுத்து போராடியவர் சுப்பிரமணிய பாரதியார். அவரது சீரிய, புரட்சிமிக்க எழுத்துக்களால் மகாகவி என்ற பட்டம் கொடுக்கப்பட்டு, மகாகவி பாரதி என்று அழைக்கப்படுகிறார்.

வெறும் 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், காலத்தால் அழியாமல், தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள மகாகவி பாரதியின் 139வது பிறந்ததினம் இன்று. அவரது பிறந்ததினத்தையொட்டி, மகாகவி பாரதி விழா என்ற பெயரில் விழா எடுக்கப்படுகிறது.

இந்த விழாவில் மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் இந்த உரை, உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் உள்ள ஒட்டுமொத்த தமிழினத்தாலும் எதிர்நோக்கப்படுகிறது.