Asianet News TamilAsianet News Tamil

மாநில மொழிகள் மூலம் இளைஞர்களிடம் அறிவியலை பரப்புங்கள் -  பிரதமர் மோடி வலியுறுத்தல்

Prime Minister Narendra Modi says use of state languages to spread the science and technology to the youth
Prime Minister Narendra Modi has urged the use of state languages ​​to spread the science and technology to the youth.
Author
First Published Jan 1, 2018, 8:57 PM IST


இந்திய விஞ்ஞானிகள் மாநில மொழிகளைப் பயன்படுத்தி, அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் இளைஞர்களிடம் பரப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

125 ஆண்டு விழா

அறிவியல் விஞ்ஞானியும், பேராசிரியருமான சத்யேந்திர நாத் போஸின் 125 ஆண்டு விழா கொல்கத்தாவில் உள்ள எஸ்.என். போஸ் அடிப்படை அறிவியலுக்கான தேசிய மையத்தில் நேற்று நடந்தது.

வீடியோ கான்பிரன்ஸ்

இந்த விழாவை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது-

மாநில மொழிகள்

மாநில மொழிகளில் அறிவியலை கற்பிக்க பேராசிரியர் போஸ் தீவிரமாக பிரசாரம் செய்தார். இதற்காக இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மீது மோகம், ஈர்ப்பு ஏற்படுவதற்காக வங்காள மொழியில், ‘கியான் ஓ பிக்யான்’ இதழைத் தொடங்கினார்.

அறிவியல் தகவல்தொடர்பை மிகப்பெரிய வழியில் பரப்ப இது வலிமையானது. அறிவியலை பரப்ப மொழி தடையாக இருக்க கூடாது அதை பரப்ப வசதியையும், வழியை ஏற்படுத்த வேண்டும்.

பிரச்சினைகளுக்கு தீர்வு

நாட்டில் உள்ள சமூக-பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வத்தையும், கவனத்தையும் செலுத்த வேண்டும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

வெகுமதி

இந்த நாட்டு மக்களின் கண்டுபிடிப்புகள், சாதனைகள் அனைத்தும் ஆய்வுக்கூடங்களின் நான் சுவர்களுக்கு உள்ளே இருந்துவிட்டால் அது நியாயமல்ல. அவர்களின் கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துக்கு சென்று, ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்படும்போது, அவர்களின் கடின உழைப்புக்கு உண்மையான வெகுமதி கிடைக்கும்.

மாற்றங்கள் தேவை

நம்முடைய கண்டுபிடிப்புகள், ஆய்வுப்பணிகளின் இறுதி முடிவுகளும் மக்களைச் சென்று அடைந்து, சமூக பொருளாதார சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்பது இன்றைய முக்கியமான விஷயமாகும். நம்முடைய கண்டுபிடிப்புகள் எந்த ஏழையின் வாழ்க்கையையும் எளிதாக்கி இருக்கிறதா?, அல்லது நடுத்தர குடும்பத்தினரின் பாரங்களை குறைத்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஆதலால், சிறந்த விஷயங்களைத் தேர்வு செய்து மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.

உயரிய இடம்

நம்முடைய விஞ்ஞானிகள் மற்ற ஆய்வு நிறுவனங்களின் விஞ்ஞானிகளுடன், தேசிய ஆய்வுகங்களுடன் கலந்தாய்வு செய்யாமல் இருக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல், நம்முடைய ஆய்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய உன்மையான திறனை வெளிப்படுத்தி, இந்திய அறிவியலை உரியவிருதுபெற கொண்டு செல்ல வேண்டும். இன்று அறிவியல் மிகப்பெரிய பன்முக ஒழுங்காக இருந்து வருவது மிகமுக்கியமாகும். அதனால், ஒருமித்த நோக்கத்துடன் கூடிய முயற்சிகள் தேவையாகும்.

கட்டமைப்பு

எங்களுடைய அரசின் அறிவியல் துறை பலவிதமான அனுகுமுறைகளில் பணியாற்றி வருகிறது. அறிவியல் கட்டமைப்பை பகிர்வதற்காக எங்களுடைய போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வெளிப்படைத்தன்மையுடன், திறன்பட, நமது வளங்களை பகிர அனுமதிக்கும்.அகாதெமி மற்றும் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு இடையே கூட்டுறவு வலிமையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios