மியான்மர் நாட்டுக்கு 3 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி அங்குள்ள 2500 ஆண்டுகால பழமையான புத்தர் கோயிலில்(ஷவேடகான் பகோடா) வழிபட்டார், முகலாய பேரரசின் கடைசி அரசர் பகதூர் ஷா ஜாபரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பிரிக்ஸ் மாநாடு

சீனாவின் ஜியாமென் நகரில் நடந்த பிரிஸ்க் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர்நரேந்திர மோடி, அங்கிருந்து 3 நாள் பயணமாக மியான்மர் நாட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மியான்மர் பயணம்

அந்நாட்டு அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகியுடன் இரு தரப்பு நாட்டு உறவுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு, சுகாதாரம், தகவள் தொழில்நுட்பம் உள்ளிட்ட 11 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

12நூற்றாண்டு கோயில்

அதன்பின் நேற்று மியான்மர் நாட்டின் பாகன் நகரில் உள்ள 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆனந்தா கோயிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இந்த கோயில் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயலால் சேதமடைந்தது, அதன்பின் இந்த கோயிலை புனரமைக்க இந்திய அரசு நிதி வழங்கியது குறிப்படத்தக்கது.

2500 ஆண்டு பகோடா

இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தின் இறுதிநாளான நேற்று பிரதமர் மோடி பல்வேறு இடங்களை பார்வையிட்டார். அதில் முக்கியமாக 2500 ஆண்டுகள் பழமையான புத்தர் கோயிலான ஷவேடகான் பகோடாவுக்கு சென்றார். இந்த கோயிலில் புத்தரின் தலைமுடி, உடற்பாகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.மியான்மர் மக்கின் கலாச்சார சின்னமாக இந்த பகோடா விளங்கி வருகிறது.

தங்கத்தகடு, வைரங்கள்

இந்த பகோடாவைச் சுற்றி நூற்றுக்கணக்கான தங்கத்திலான தகடுகள் பதிக்கப்பட்டு, கோபுரத்தின் உச்சியில் 4 ஆயிரத்து 531 விலை உயர்ந்த வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வைரங்களும் 72 காரட் தரமுடையவை.

அங்கிருந்து போக்யோக் ஆங் சான் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.  அவருடன் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகியும் சென்றார்.

இந்த அருங்காட்சியகம் குறித்த பிரதமர் மோடி அங்குள்ள குறிப்பேட்டில் குறிப்படுகையில், “ போக்யோக் ஆங் சான் அருங்காட்சியகத்தை எனக்கு சுற்றிக்காட்டிய ஆலோசகர் டா ஆங் சான் சூகிக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். ஜெனரல் ஆங் சானை வணங்குகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

முகலாய அரசர் நினைவிடம்

முகலாயப் பேரரசின் கடைசி வாரிசான பகதூர் ஷா ஜாபரின் கல்லறை ரங்கூனில்உள்ளது. கடந்த 1857ம் ஆண்டு நடந்த புரட்சிக்கு பின் இந்தியாவில் இருந்து தப்பிபகதூர் ஷா மியான்மர் வந்துசேர்ந்தார். மிகச்சிறந்த உருது கவிஞர், ஓவியரானபகதூர் ஷா தனது 87வயதில் இங்கு இறந்தார். அவரின் நினைவிடத்துக்கு சென்ற பிரதமர் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

யாங்கான் நகரில் உள்ள காளிபரி கோயிலுக்கு சென்ற மோடி, அங்கு அம்மனை வழிபட்டு, டுவிட்டரில் படத்தையும் வௌியிட்டார்.