கண்ணீர் விட்டு அழுத மோடி..! 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் இறுதி சடங்கிற்கு 4 கிலோ மீட்டர் வரை நடந்தே சென்ற பிரதமர் மோடி இறுதிச்சடங்கில் கண்ணீர்விட்டு அழுத காட்சி அனைவரையும் நெகிழ செய்து உள்ளது. 

93 வயதான  வாஜ்பாய் அவர்கள், கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். பின்னர் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை மரணம் அடைந்ததாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது.
 
இன்று அவர் இறுதி சடங்கு நடந்தது. பிரதமர் மோடி, அத்வானி, அமித் ஷா, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். இன்று மாலை அங்குள்ள யமுனை நதிக்கரையில் வைத்து வாஜ்பாய்க்கு இறுதி சடங்கு நடைபெற்றது. முப்படைகளும் சூழ்ந்த வண்ணம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, கண்ணீர்விட்டு அழுதார். அந்த காட்சி  அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது. 

ஸ்மிருதி ஸ்தலத்தில் வாஜ்பாய் உடலை இறக்கியபோதும் கண் கலங்கினார். நாட்டின் தலைசிறந்த பிரதமரான வாஜ்பாய் அவர்கள் இறந்ததை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை உணர்த்தும் விதமாகவும், வாஜ்பாய் மீது பிரதமர் நரேந்திர மோடி கொண்ட அன்பு மரியாதை பற்று காரணமாக இன்று 4 கிலோ மீட்டர் தூரம், இந்த வயதிலும் அசராது நடந்து வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தியது எதிர்  கட்சியினரையும் கவர்ந்து உள்ளது என்றே பலரும் கருத்து தெரிவித்து  வருகின்றனர்.