மூன்று மாநிலங்களில் மூன்று வேளை உணவருந்தும் அளவிற்கு நேற்றைய தினம், பயங்கர பிசியான ஞாயிற்றுக்கிழமையாக கழிந்ததாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவீட் செய்துள்ளார். 

மூன்று மாநிலங்களில் மூன்று வேளை உணவருந்தும் அளவிற்கு நேற்றைய தினம், பயங்கர பிசியான ஞாயிற்றுக்கிழமையாக கழிந்ததாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவீட் செய்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை பொதுவாக அரசு விடுமுறை தினம். ஆனால் நேற்றைய தினம் குடியரசுத் தலைவருக்கு படுபிசியான நாளாக அமைந்துள்ளது. தெலுங்கானாவில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்றைய காலை உணவை அம்மாநிலத்தில் சாப்பிட்டுள்ளார். 

அதன்பிறகு, அங்கிருந்து சென்னைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை மருத்துவமனையில் சந்தித்தார். அதன்பிறகு சென்னையிலிருந்து கிளம்பி கேரளாவிற்கு சென்று அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தெலுங்கானாவில் காலை உணவு, தமிழ்நாட்டில் மதிய உணவு, கேரளாவில் இரவு உணவு என பிசியான ஞாயிற்றுக்கிழமையாக நேற்று அமைந்ததாக பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…