இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடிவர்களை பிடிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலையடுத்து இந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது. பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த தொழிலதிபர்களை மீட்டு வந்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசின் இந்த புதிய சட்டம் வழிவகுக்கிறது.

இச்சட்டத்தால் இனி பொருளாதார குற்றம் செய்தவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிப்பது முற்றிலுமாக தடுக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சம் அடைவதால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது கடினமாக உள்ளது. இந்நிலையில் புதிய சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.