விந்தியகிரி போர்க்கப்பலை ஆக. 17இல் கடற்படைக்கு அர்ப்பணிக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
ப்ராஜெக்ட் 17A திட்டத்தின் கீழ், மஜாகான் டாக் நிறுவனம் (Mazagon Dock Ltd) மூலம் மொத்தம் நான்கு போர்க்கப்பல்களும் கார்டன் ரீச் (GRSE ) நிறுவனம் மூலம் மூன்று போர்க்கப்பல்களும் தயாரிக்க திட்டமிடப்பட்டது.
'விந்தியகிரி' போர்க்கப்பலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 17 அன்று கொல்கத்தாவில் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கிறார். கர்நாடகாவில் உள்ள விந்திய மலைத்தொடரை நினைவுறுத்தும் வகையில் இந்த போர்க்கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
விந்தியகிரி போரக்கப்பல் திட்டம் 17A திட்டத்தின் ஆறாவது கப்பலாகும். இது ஆகஸ்ட் 17 அன்று கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனத்தில் (GRSE) நடைபெறும் நிகழ்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது.
"தொழில்நுட்பத்தில் மேம்பட்ட போர்கப்பலான விந்தியகிரி, அதன் முன்னோடியான ஐஎன்எஸ் விந்தியகிரியின் புகழ்பெற்ற சேவைக்கு உரிய மரியாதை செலுத்துகிறது" என்று கடற்படை கூறுகிறது. பழைய விந்தியகிரி ஜூலை 1981 முதல் ஜூன் 2012 வரை கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் கடற்படை சேவையில் உள்ளது. பல்வேறு சவாலான செயல்பாடுகள் மற்றும் பன்னாட்டுப் போர் பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறது.
"புதிதாகப் பெயர் சூட்டப்பட்ட விந்தியகிரி, அதன் வளமான கடற்படை பாரம்பரியத்தை தழுவிக்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அடையாளமாக உள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களின் எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறது" என்று கடற்படை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ப்ராஜெக்ட் 17A திட்டத்தின் கீழ், மஜாகான் டாக் நிறுவனம் (Mazagon Dock Ltd) மூலம் மொத்தம் நான்கு போர்க்கப்பல்களும் கார்டன் ரீச் (GRSE ) நிறுவனம் மூலம் மூன்று போர்க்கப்பல்களும் தயாரிக்க திட்டமிடப்பட்டது. விந்தியகிரி அதில் ஆறாவது போர்க்கப்பலாக அமைகிறது. திட்டத்தின் முதல் ஐந்து கப்பல்கள் (நீலகிரி, ஹிம்கிரி, உதயகிரி, துனகிரி, தாரகிரி) 2019 முதல் 2022 வரை யான காலத்தில் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
புராஜெக்ட் 17A கப்பல்களின் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளுக்கான கணிசமான 75 சதவீத ஆர்டர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து வந்தவை என இந்திய கடற்படை தெரிவிக்கிறது. விந்தியகிரி போர்க்கப்பல் தன்னிறைவு கொண்ட கடற்படையை உருவாக்குவதில் நமது தேசம் அடைந்துள்ள முன்னேற்றத்திற்குப் சான்றாகும் எனவும் என்று கடற்படை கூறுகிறது.
பீகாரில் நர்ஸ் கூட்டு பலாத்காரம்... கொலை செய்து ஆம்புலன்சில் மறைத்து வைத்த மருத்துவர்