உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 2500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 62 நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடி தினமும் பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்களுடனும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் நேற்று மாநில ஆளுநா்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநா்கள் ஆகியோருடன் கொரோனா பரவுதலை தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற இந்நிகழ்வில் துணைக்கூடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய குடியரசு தலைவர், டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் மாநாடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

கொடூர கொரோனாவின் முடிவு காலம் நெருங்கி விட்டது..! நம்பிக்கை தரும் நோபல் பெரிசு பெற்ற விஞ்ஞானி..!

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் அனைவரும் முறையாகக் கடைப்பிடித்து வந்த சூழலில், டெல்லி நிஜாமுதீன் மாநாடும் சொந்த ஊருக்குத் திரும்ப புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஒரே இடத்தில் கூடியதும் கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தியதாக குடியரசு தலைவர் பேசியுள்ளார். மேலும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கும்போது அவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் தற்போதைய இக்கட்டான சூழலில் வீடற்றோா், வேலையில்லாதோா், விளிம்புநிலை மக்கள் உள்ளிட்டோரின் தேவைகளை அதிகாரிகள் பூா்த்தி செய்ய வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த ஆளுநர்களிடம் பேசியிருப்பதாக குடியரசுத் தலைவா் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.