14-வது குடியரசு தலைவருக்கான வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியது. 

குடியரசு தலைவர் தேர்தல் வாக்குபதிவு கடந்த 17 ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது. 14-வது குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில் 99 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, வாக்கு சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று காலை சுமார் 11 மணியளவில் குடியரசு தலைவருக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

எண்ணப்பட்ட வாக்குகள் இன்று மாலை, 14-வது குடியரசு தலைவர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கென்று தனித்தனியே வாக்கு மதிப்பீடுகள் நடைபெற்று வருகின்றன. 

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களின் மாநில மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மதிப்பீடுகள் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மதிப்பீடாக வழங்கப்படுகிறது. புதிய குடியரசு தலைவர் பதவியேற்கும் விழா வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.