காசிக்குச் செல்ல புதிய கங்கை ரயில் பாலம்! மகா கும்பமேளாவுக்கு முன் சூப்பர் சர்ப்ரைஸ்!
Ganga rail bridge: 2025 மகா கும்பமேளாவுக்கு முன்பாக பிரயாக்ராஜில் இருந்து வாரணாசிக்குச் செல்ல புதிய ரயில் வசதி கிடைக்கப் போகிறது. கங்கை ரயில் பாலம் திறக்கப்பட்டதும் ரயில்கள் மணிக்கு 100-130 கிமீ வேகத்தில் பயணிக்கும்.
2025 மகா கும்பமேளாவை முன்னிட்டு இந்திய ரயில்வே பிரயாக்ராஜ், வாரணாசிக்கு இடையிலான பயணத்தை இன்னும் வேகமாகவும் சுலபமாகவும் மாற்றியுள்ளது. டபுள் இன்ஜின் அரசாங்கத்தின் மூலம் பிரயாக்ராஜ், வாரணாசிக்கு இடையில டபுள் ரயில்பாதை கிடைக்க உள்ளது.
இந்த ரயில்பாதையின் முக்கியமான அங்கமான கங்கை ரயில் பாலம் கட்டும் வேலையும் முடிந்துவிட்டது. மகா கும்பமேள நடக்கும்போது, இந்த வழித்தடத்தில் ரயில்கள் ஓட ஆரம்பித்துவிடும். டபுள் டிராக் வந்த பிறகு பிரயாக்ராஜில் இருந்து வாரணாசிக்கு ரயில்கள் சராசரியாக மணிக்கு 100-130 கிமீ வேகத்தில் போகும். டிசம்பர் 8ஆம் தேதி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்த பிறகு, பிரதமர் மோடி இந்தப் பாலத்தில் ரயில் இயக்கதைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.
2025 மகா கும்பமேளா வைபவத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 40 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜ் நகருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்திய ரயில்வேயும் அதற்காக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வாரணாசி - பிரயாக்ராஜ் வழித்தடத்தில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் ரயில்வே கங்கை ரயில் பாலத்தையும் கட்டி முடித்திருக்கிறது.
டிசம்பர் 8ஆம் தேதி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாலத்தை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்வார். அதற்குப் பிறகு டிசம்பர் 13ஆம் தேதி பிரதமர் மோடி இந்த ரயில் பாலத்தைத் தொடங்கி வைப்பார். இந்த ரயில் பாலம் திறந்ததும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போல வேகமாக ரயில்கள் இயக்கப்படும். பிரயாக்ராஜில் இருந்து வாரணாசிக்கு ஒன்றரை மணிநேரத்தில் போக முடியும்.
இந்திய ரயில்வேயின் RVNL அமைப்பு கங்கை ரயில் பாலம் அமைக்கும் பணியைச் செய்துள்ளது. இந்தப் பாலம் கட்ட 2003-லேயே திட்டம் போடப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சனைகள் காரணமாக வேலை நடப்பதில் சிக்கல் காணப்பட்டது. பின்னர், 2019-ல் கங்கை பாலம் கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டது.
கும்பமேளாவுக்கு முன் இந்தப் பாலத்தின் வழியே ரயில்கள் ஓடத் தொடங்கிவிடும். கங்கை ரயில் பாலம் பிரயாக்ராஜில் உள்ள தாராகஞ்சையும், ஜூன்சியையும் இணைக்கிறது. இந்த ரயில்பாதையில் தினமும் கிட்டத்தட்ட 200 ரயில்கள் பயணிக்கின்றன. இந்த வழித்தடத்தில் டெல்லி-கொல்கத்தா, ஹவுரா, பிரயாக்ராஜ் கொல்கத்தா, பிரயாக்ராஜ் கோரக்பூர், பிரயாக்ராஜ் பாட்னா இடையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.