சிபிஐ இயக்குநராகும் கர்நாடக டிஜிபி பிரவீன் சூத்! டி.கே. சிவகுமாருக்கு காத்திருக்கும் ஆபத்து என்ன?
மத்திய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான சிபிஐ-க்கு இயக்குநராக பிரவீன் சூத் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு நிறுவனங்கள் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் சிபிஐ-யின் அடுத்த இயக்குநராக கர்நாடக காவல்துறைத் தலைவராக இருக்கும் பிரவீன் சூத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சிபிஐ இயக்குநரான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் வரும் மே 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அவருக்குப் பின் பிரவீன் சூத் சிபிஐ இயக்குநராகப் பொறுப்பேற்பார். 2 ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் பணிபுரிவார். பிரதமர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு சிபிஐ இயக்குநரை நியமனம் செய்யும். இந்தப் பதவிக்கு பிரவீன் சூத் உள்பட மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர் பரிசீலிக்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவித்தன. சனிக்கிழமை மாலை நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இந்தப் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
கர்நாடகாவில் போட்டி போட்டு போஸ்டர் ஓட்டும் சித்தராமையா - டி.கே. சிவகுமார் ஆதரவாளர்கள்!
அதன்படி, பிரவீன் சூத் (கர்நாடகா டிஜிபி), சுதிர் சக்சேனா (மத்தியப் பிரதேசம் டிஜிபி) மற்றும் தாஜ் ஹாசன் ஆகியோரின் பெயர்கள் சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டன. இந்த மூவரில் முன்னிலையில் இருப்பவராகக் கருதப்பட்ட பிரவீன் சூத் சிபிஐ இயக்குநர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரவீன் சூத் இவர் 1986ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சிபிஐ தலைமைப் பொறுப்பில் இவருடைய பதவிக்காலம் 2 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரை செய்த மாயம்! ராகுல் காந்தி பயணித்த 20 தொகுதிகளில் 15ல் காங்கிரஸ் வெற்றி!
டி.கே. சிவகுமார் vs பிரவீன் சூத்
கடந்த மார்ச் மாதம் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், டிஜிபி பிரவீன் சூட் ஆளும் பாஜக அரசாங்கத்தின் பாதுகாவலராக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்யும் காவல்துறை டிஜிபி பிரவீன் சூத்தை கைது செய்ய வேண்டும் என்று சிவக்குமார் வலியுறுத்தினார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது பிரவீன் சூத் சிபிஐ இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. டி.கே. சிவகுமார் மீது சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையில் பல்வேறு வழக்குகள் உள்ளன. டிகே சிவகுமாரால் விமர்சிக்கப்பட்ட பிரவீன் சிபிஐ இயக்குநராக இருப்பது அவருக்கு வருங்காலத்தில் நெருக்கடிகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
டெல்லி ஆர்ட் கேலரியில் ஜன சக்தி கண்காட்சி! மன் கீ பாத் உரைகளைக் ஓவியமாக்கிய கலைஞர்கள்!