pranab mukarjee speech in gst meeting
பார்லிமென்டில் நேற்று நள்ளிரவு (ஜூன் 30) ஜிஎஸ்டியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:
பல்வேறு நீண்ட நெறிமுறைகளுக்கு பிறகு ஜி.எஸ்.டி அமலாகிறது. இது நாட்டின் முக்கியமான தருணம். இதனை சாத்தியப்படுத்திய அரசுக்கு எனது வாழ்த்துகள்.
நிதியமைச்சராக நான் இருந்தபோது ஜிஎஸ்டி உருவாக்கத்தில் பெரிய அளவில் பங்காற்றி உள்ளேன். 14 ஆண்டு பயணம் பயனை எட்டும் நேரம் வந்தள்ளது. ஜிஎஸ்டிக்கு நான் கடந்தாண்டு ஒப்புதல் அளித்தேன். ஜிஎஸ்டிக்கு ஒப்புதல் அளித்ததை பெருமையாக கருதுகிறேன்.
மத்திய, மாநில அரசுகளின் கருத்தொற்றுமை அடிப்படையிலே ஜிஎஸ்டி உருவாகி உள்ளது. அரசியல் சட்டப்படி ஜிஎஸ்டி உருவாக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் நாட்டின் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
