இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.
இந்தியாவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பிரதமர் திரு.நரேந்திரமோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன. பின்னர் அறிவுசார் சொத்துரிமை, பண்டமாற்று மற்றும் வணிக ஒத்துழைப்பு ஆகிய 3 ஒப்பந்தங்கள் இருநாடுகள் இடையே கையெழுத்தாகின.
இந்நிலையில், டெல்லியில் இன்று, குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியை, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் சந்தித்துப் பேசினார். இதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரை, சிங்கப்பூர் பிரதமர் இன்று பார்வையிடுகிறார்.
