டெல்லியில் 7.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 7.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டெல்லியில் நேற்றிரவு ஒரே நிமிடத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதும் ஏற்படாவிட்டாலும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கம்: அவசரச் சட்டத்தை ஒப்புதலுக்கு ஆளுநருக்கே அனுப்பிய கேரள அரசு
இதனிடையே டெல்லியில் 7.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து நிலநடுக்க ஆபத்து மைக்ரோசோனேஷன் என்ற தலைப்பிலான ஆய்வு அறிக்கையில், நிலநடுக்க ஆபத்து பட்டியலின்படி டெல்லி மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் பெரும்பாலான பகுதிகள், வடக்கு டெல்லியின் சில பகுதிகள் மற்றும் தென்மேற்கு டெல்லியின் குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் ஆபத்து பட்டியலில் உள்ளன.
இதையும் படிங்க: தெலங்கானாவில் தாமரை மலரும்! மக்கள்தான் முக்கியம்! குடும்பம் அல்ல! கேசிஆர்-க்கு பிரதமர் மோடி விளாசல்
தலைநகர் டெல்லியில் எப்போது வேண்டுமானாலும் 7 முதல் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பேரழிவுகள் ஏற்படலாம். எனவே தலைநகர் டெல்லியில் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மக்கள் தொகை நெருக்கமுள்ள பகுதிகள் கண்காணித்து அதனை முறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
