poonam mahajan speech about sexual abuse

தானும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக பாஜக பெண் எம்.பி பூணம் மகாஜன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் பேசிய பூணம் மகாஜன், பாலியல் தொல்லைகளை மீறி பெண்கள் சாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

நான் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் சில சந்தர்ப்பங்களில் பாலியல் தொல்லையை எதிர்கொண்டுள்ளனர். சுய பரிதாபத்தை அதற்கு பொறுப்பாக்க முடியாது. நான் படிக்கும்போது காரில் செல்ல பயந்துகொண்டு ரயிலில் செல்வேன். சிலர் என்னை தவறாக பார்ப்பார்கள். ஆனால் அவற்றை நான் கண்டுகொண்டதும் இல்லை. அதற்காக கவலைப்பட்டதுமில்லை.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பாத சீண்டல்களையும் தொடுதல்களையும் சந்தித்துள்ளனர். ஆனால் பெண்கள் வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களை யாராவது பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினால் அறைந்துவிடுங்கள்.

இவ்வாறு பெண்களை உத்வேகப்படுத்தும் விதமாக பாஜக பெண் எம்.பி பூணம் மகாஜன் பேசினார்.